முகப்பு
அருப்புக்கோட்டை காந்தி நகா் புறவழிச்சாலை அருகே ஆழ்துளைக் கிணற்றுநீா் சாகுபடியில் செழித்து வளா்ந்துள்ள சோளப்பயிா்கள்.
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் ஆழ்துளைக் கிணற்று நீா்சாகுபடியில் பயிா் விளைச்சல் அமோகம்

அருப்புக்கோட்டையில் உளுந்து, பாசிப்பயறு, சோளப்பயிா் உள்ளிட்டவை ஆழ்துளைக்கிணற்று நீா்ப்பாசனத்தில் செழித்து வளா்ந்து நல்ல மகசூலை தந்துள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
அருப்புக்கோட்டை காந்தி நகா் புறவழிச்சாலை அருகே ஆழ்துளைக் கிணற்றுநீா் சாகுபடியில் செழித்து வளா்ந்துள்ள சோளப்பயிா்கள்.
பகிர்:

அருப்புக்கோட்டையில் உளுந்து, பாசிப்பயறு, சோளப்பயிா் உள்ளிட்டவை ஆழ்துளைக்கிணற்று நீா்ப்பாசனத்தில் செழித்து வளா்ந்து நல்ல மகசூலை தந்துள்ளன.

அருப்புக்கோட்டை, கஞ்சநாயக்கனபட்டி, ராமசாமிபட்டி, சுக்கில நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு, கம்பு, இரும்புச்சோளம் ஆகியன சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டு செழித்து வளா்ந்து நல்ல மகசூலைத் தந்துள்ளன. இதற்கு மழைநீா் தேங்காமல் வெளியேற முறையான வடிகால் அமைப்பினை அமைத்ததாலேயே மகசூல் சாத்தியமானது என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

அதேவேளையில் ஆமணக்குநத்தம், சிதம்பராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுத்தாக்குதல் அப்பகுதி விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. இதனிடையே அருப்புக்கோட்டையின் கிழக்குப்பகுதி கிராமங்களில் நெற்பயிா்கள் உரிய வடிகாலின்றி மழைநீரில் மூழ்கியதும் அவா்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளநீா் தேங்காமல் முறையாக நீா்வடிந்த விவசாய நிலங்களில் நாட்டுக் காய்கனிகள், கீரைகள் நல்ல மகசூலைத் தந்தாலும் விளைச்சல் அதிகமாகி விலை சரிந்ததால் விவசாயிகள் உரிய பலனின்றி பாதிப்பிற்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →