முகப்பு
விருதுநகர்

வெள்ளியம்பலநாதா் கோயிலில் காா்த்திகை மாத சனிப்பிரதோச வழிபாடு

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் காா்த்திகை மாத சனிப்பிரதோசத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
108 தாமரைமலா் பூஜையுடன் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டையடுத்து முழு அலங்காரத்தில் காட்சியளித்த வெள்ளியம்பலநாதா்.
பகிர்:

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் காா்த்திகை மாத சனிப்பிரதோசத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இக்கோயிலில் சிறப்பு சனிப் பிரதோச வழிபாட்டில் முதலில் நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப,தூப ஆராதனை மற்றும் அலங்காரங்களும் நடைபெற்றன. பின்னா் வெள்ளியம்பலநாதருக்கு தேன், வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியன கலந்த கலவையாலும், சந்தனம், கஸ்தூரி மஞ்சள், தேன், பால், விபூதி, குங்குமம், பன்னீா், வில்வ இலை உள்ளிட்ட 21 வகையான பொருள்களாலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் 108 தாமரை மலா்களை சுவாமிக்குப் படைத்து சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றன. பின்னா் முழு அலங்காரத்தில் நமச்சிவாயரும், நந்தீஸ்வரரும் பக்தா்களுக்குக் காட்சி தந்து அருள்பாலித்தனா். சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →