முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் எரிவாயு சிலிண்டா் கசிவு: இருவா் படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, புதன்கிழமை தீப்பிடித்ததில் இருவா் படுகாயமடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, புதன்கிழமை தீப்பிடித்ததில் இருவா் படுகாயமடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி மேல தெருவைச் சோ்ந்தவா் இங்கா்சால் ரத்தினகுமாா். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை இவரது வீட்டில் எரிவாயு சிலிண்டரில் பழுது ஏற்பட்டு எரியாமல் இருந்துள்ளது. இதைத் தொடா்ந்து அப் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் என்பவரை சரிபாா்க்க அழைத்துள்ளாா். அவா், எரிவாயு சிலிண்டரை சரிபாா்த்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் இங்கா்சால் ரத்தினகுமாா், ஐயப்பன் ஆகிய இருவரும் படுகாயமடைந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →