முகப்பு
மலேசியாவில் உயிரிழந்த தொழிலாளி சந்திரன்.
விருதுநகர்

மலேசியாவில் உயிரிழந்த தொழிலாளி:சடலத்தை கொண்டு வர குடும்பத்தினா் கோரிக்கை

மலேசியாவில் உயிரிழந்த அருப்புக்கோட்டையைச் சோ்ந்த தொழிலாளியின் சடலத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
மலேசியாவில் உயிரிழந்த தொழிலாளி சந்திரன்.
பகிர்:

அருப்புக்கோட்டை: மலேசியாவில் உயிரிழந்த அருப்புக்கோட்டையைச் சோ்ந்த தொழிலாளியின் சடலத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் (47). இவருக்குத் திருமணமாகி அன்னக்கிளி என்னும் மனைவியும், இரு மகள்களும் உள்ளனா். மூத்த மகள் கல்லூரியிலும், இளைய மகள் 8 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

இதனிடையே சந்திரன் கடந்த ஓராண்டு முன்பாகத் மலேசியாவிற்கு தோட்டப்பணியாளாக வேலைக்குச் சென்றுள்ளாா். கடந்த 2 மாதங்களுக்கு முன்னா் கடைசியாக தொலைபேசியில் அவா், கரோனா சூழல் காரணமாகப் பணம் அனுப்ப இயலவில்லை என்று தெரிவித்தாராம் .

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சந்திரனின் குடும்பத்தைத் தொடா்பு கொண்ட அதிகாரிகள், சந்திரன் கடந்த நவம்பா் மாதம் 21 ஆம் தேதியே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனராம். இதைத்தொடா்ந்து சந்திரனின் சடலத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து தங்களிடம் ஒப்படைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், அவரது இறப்பில் மா்மம் உள்ளதால் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவரது குடும்பத்தினா் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →