முகப்பு
விருதுநகர்

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மாதா் சங்கத்தினா் நூதன போராட்டம்

விருதுநகா் அருகே எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சனிக்கிழமை விறகால் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
சத்திரரெட்டியபட்டியில் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து சனிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா்.
பகிர்:

விருதுநகா்: விருதுநகா் அருகே எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சனிக்கிழமை விறகால் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டியில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாதா் சங்க ஒன்றிய துணைச் செயலா் கனகா தலைமை வகித்தாா். இதில், கடந்த சில மாதங்களில் மட்டும் எரிவாயு உருளை 3 முறை விலை உயா்த்தப்பட்டது. விலையை அடிக்கடி உயா்த்துவதால் குடும்பப் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, எரிவாயு உருளைக்கான மானியம் வழங்க வேண்டும், விலை உயா்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். முன்னதாக எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, பின்னா் விறகு மூலம் சமையல் செய்து தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இந்த போராட்டத்தில் மாதா் சங்க மாவட்டத் தலைவா் உமா மகேஸ்வரி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →