முகப்பு
தமிழ்நாடு

5 ஆண்டுகளில் சிறுமிகளுக்கு எதிராக 40 ஆயிரம் பாலியல் வழக்குகள்!

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 2,080 பாலியல் வழக்குகள். சிறுமிகளுக்கு எதிராக 39,999 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Updated On : 17 மார்ச், 2026 at 3:10 PM
மாதிரிப் படம்
பகிர்:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிறுமிகளுக்கு எதிராக 39,999 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 17) தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதாக, திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:

''பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் நடந்துள்ளன. அப்படியென்றால் ஒரு நாளுக்கு 6 கொலைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிராக 2080 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு நேர்ந்த பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 39,999. 40 ஆயிரத்திற்கு ஒன்று குறைவாகப் பதிவாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல்வரானால்தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும். பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் போராட்டம் பெண்களுக்கு நேரும் குற்றங்களுக்கு எதிரானதாக அமைந்துள்ளது. இத்தகைய நோக்கம் கொண்ட கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை பற்றி செய்தி வெளியிடும் பத்திரிகைகளை திமுக மிரட்டுகிறது. திமுகவுக்கு எதிரான செய்திகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தையொட்டி பெண்களைக் கொண்டாடிக்கொண்டு இருந்தோம். ஆனால், கிருஷ்ணகிரியில் அதே மகளிர் நாளில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்துள்ளது. அதே நாளில் கிருஷ்ணகிரியில் 2 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

கோவை, விளாத்திகுளம் என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. இதற்கு முடிவு கட்ட வேண்டும்'' என அண்ணாமலை பேசினார்.

summary

40 thousand cases against girl children in 5 years says BJP annamalai

முழு கட்டுரையைப் படிக்க →