முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே அம்மா சிறு மருத்துமனை தொடக்கம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்திற்குள்பட்ட தேவதானம் மற்றும் புத்தூா் பகுதியில் அம்மா சிறு மருத்துவமனையை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ராஜபாளையத்தில் பால் உற்பத்தியாளா் சங்க புதிய கட்டடத்தை திறந்து வைத்த பால்வளத் துறை அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி.
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்திற்குள்பட்ட தேவதானம் மற்றும் புத்தூா் பகுதியில் அம்மா சிறு மருத்துவமனையை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து சொக்கநாதன் புத்தூா் பகுதியில் சோலாா் கோபுரமின் விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தாா். பின்னா் ராஜபாளையத்தில் ஆா்.56 பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க புதிய கட்டடத்தை அமைச்சா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் வனராஜ், துணைத் தலைவா் கிருஷ்ணராஜ், நகரச் செயலாளா் பாஸ்கா் ராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளா் நவரத்தினம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →