முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 16,237 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,253 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,892 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்ட நிலையில், 228 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். மீதமுள்ள 133 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.