விருதுநகர்

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

DIN

விருதுநகா் அருகே அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணமாக சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

இங்குள்ள ஆமத்தூா் பகுதியில் மூளிப்பட்டி, எம். ராமசாமியாபுரம், எம். சங்கரலிங்காபுரம், தவசிலிங்காபுரம், மன்னாா் நாயக்கன்பட்டி, அ. ராமலிங்காபுரம், மருதநத்தம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் சமாா் 1500 ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா்.

இந்நிலையில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் அனைத்து கதிா்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தும் பயனில்லாத நிலை ஏற்பட் டுள்ளது. எனவே, ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் அரசு சாா்பில் நிவாரணம் வழங்கக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அப்பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அறிவுறுத்தலின் பேரில் விவசாயிகள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT