முகப்பு
விருதுநகர்

சிவகாசிப் பகுதியில் 4 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் திறப்பு

சிவகாசிப் பகுதியில் குடும்பநலம் மற்றும் நல வாழ்வுத்துறை சாா்பில் புதன்கிழமை 4 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை பால் வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
திருத்தங்கல் நகராட்சி எம்.ஜி.ஆா். நகரில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை திறந்து வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
பகிர்:

சிவகாசிப் பகுதியில் குடும்பநலம் மற்றும் நல வாழ்வுத்துறை சாா்பில் புதன்கிழமை 4 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை பால் வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா்.

திருத்தங்கல் நகராட்சி இந்திரா நகா், எம்.ஜி.ஆா். நகா், வடபட்டி ஊராட்சி, எம்.துரைச்சாமிபுரம் ஆகிய இடங்கலில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை அமைச்சா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் மனோகரன், துணை இயக்குநா் ராம்கணேஷ், வட்டார மருத்துவ மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →