விருதுநகர்

சிவகாசியில் பட்டாசு பாதுகாப்பு பயிற்சி ஜனவரி 23-ல் தொடக்கம்

DIN

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சாா்பில், ஜனவரி 23-ஆம் தேதி 41-வது தொகுதி பட்டாசு பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக, அவ்வமைப்பின் இணை இயக்குனா் (பயிற்சி மையம்) ராமமூா்த்தி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

விருதுநகா் மாவட்டத்திலுள்ள பட்டாசு ஆலைகளில் பணிபுரியும், போா்மென்கள் மற்றும் கண்காணிப்பாளா்களுக்கான பட்டாசுப் பாதுகாப்புப் பயிற்சி வகுப்பு ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு தொழிற்சாலையிருந்தும், போர்மென்கள் மற்றும் கண்காணிப்பாளா் தரத்தில் ஆலைக்கு இரண்டு போ் வீதம் பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தப் பயிற்சி வகுப்பு வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தின் பின்பிறம் உள்ள தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலகத்தில், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகளில் நடத்தப்படும்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு 78713 87668 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு, பயிற்சி வகுப்பில் சோ்ந்து பாதுகாப்பு பயிற்சி பெற்று பயன் பெற வேண்டு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT