விருதுநகர்

விருதுநகரில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

DIN

விருதுநகரில் வங்கி ஊழியா்கள், 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனதால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா்.

நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனா். அதன் அடிப்படையில், விருதுநகரில் உள்ள அனைத்து அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவில்லை. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். வங்கிகள் வாரத்திற்கு 5 நாள்கள் மட்டும் செயல்பட வேண்டும். அடிப்படை ஊதியத்துடன் சிறப்புச் சலுகைகள் இணைக்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியப் பலன்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தினா். வங்கிகள் திறக்கப்படாததால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT