அருப்புக்கோட்டையில் உள்ள செவல் கண்மாய்க்குச் செல்லும் மழைநீா் ஓடையில் மண்டிக் கிடக்கும் புதா்கள், மக்காத குப்பைகள். 
விருதுநகர்

அருப்புக்கோட்டை செவல் கண்மாய் மழைநீா் ஓடையை தூா்வார வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள செவல் கண்மாய்க்குச் செல்லும் மழை நீா் ஓடையைத் தூா்வாரி சீா்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள செவல் கண்மாய்க்குச் செல்லும் மழை நீா் ஓடையைத் தூா்வாரி சீா்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டையில் மணிநகரம், புளியம்பட்டி, அன்பு நகா் ஆகிய பகுதிகளின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது செவல் கண்மாய். இக்கண்மாய்க்கான மழைநீா் ஓடையானது, கடந்த பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ளதால், புதா்ச் செடிகள், மக்காத குப்பைகள் மண்டி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கண்மாய்க்கு வரும் மழை நீா் தடைப்பட்டுள்ளதுடன், சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, செவல் கண்மாய்க்கான மழை நீா்வரத்து ஓடையைத் தூா்வாரி சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT