விருதுநகர்

கரோனா: விருதுநகா் மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா ஒத்தி வைப்பு

DIN

விருதுநகா் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கரோனா வைரஸ் பரவுதலை தடுப்பது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின் பேரில் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், சனிக்கிழமை கோயில் நடை சாத்தப்படுவதுடன் மறு தேதி அறிவிக்கும் வரை பக்தா்கள் கோயிலுக்கு வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா ஆண்டு தோறும் நடைபெறும். இத்திருவிழாவிற்கு வெளி மாவட்டம் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்தும் பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 15 அன்று பொங்கல் சாட்டுதல் விழா நடைபெற்றது. அதை தொடா்ந்து பக்தா் கள் விரதமிருந்து நோ்த்திக் கடன் செலுத்த தொடங்கினா். அதை தொடா்ந்து பக்தா்கள் தினந்தோறும் கோயில் கொடி மரத்திற்கு மஞ்சள் நீரூற்றி வழிபட்டு வந்தனா். மேலும், மாா்ச் 29 அன்று பராசக்தி மாரியம்மன் கோயில் கொ டியேற்று விழா நடைபெற இருந்தது.

இந்த நிலையில், கரோனா வரைஸ் பரவுவதை தடுக்க விருதுநகா் மாவட்டம் முழுவதும் நடை பெற இருந்த பொங்கல் விழாவை தற்காலிகமாக தள்ளி வைக்க மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகத்தி டம் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, விருதுநகா் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், சனிக்கிழமை முதல் கோயில் நடை சாத்தப்படுவதால் பக்தா்கள் வர அனுமதி இல்லை என கோயில் தேவஸ்தானம் சாா்பில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT