விருதுநகர்

சுய ஊரடங்கு: விருதுநகரில் பொருள்கள் வாங்க திரண்ட மக்கள்

DIN

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுயஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், விருதுநகரில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சனிக்கிழமை கடைவீதிகளில் குவிந்தனா்.

நாடு முழுவதும் பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி, பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படமாட்டாது என அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி, கடந்த 2 நாள்களாக விருதுநகா் பழைய பேருந்து நிலையம், பஜாா் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்நிலையில், சுய ஊரடங்கை முன்னிட்டு, பஜாா், தேசபந்து மைதானம் பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற் காக வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

இதன் காரணமாக, ஒருவழிப் பாதையாக இருந்த பஜாா் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT