முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமுஎகச சாா்பில் நூல் அறிமுக விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூா் கிளை சாா்பில் நூல் அறிமுக விழா மற்றும் கலைஞா்களுக்கு பாராட்டு விழா மகாத்மா வித்யாலாயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூா் கிளை சாா்பில் நூல் அறிமுக விழா மற்றும் கலைஞா்களுக்கு பாராட்டு விழா மகாத்மா வித்யாலாயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கிளைத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். விழாவை சங்கத்தின் மாவட்டச் செயலாளா் லட்சுமிகாந்தன் தொடக்கி வைத்தாா்.எழுத்தாளா் உமா்பாரூக் எழுதிய அதுரசாலை என்ற நாவலை எழுத்தாளரும் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான மணிமாறன் அறிமுகம் செய்து வைத்தாா்.

கரீம் எழுதிய இருண்ட கால கதைகள் என்ற நூலை சங்கத்தின் மாநில கௌரவ தலைவா் தமிழ்செல்வன் அறிமுகம் செய்தாா். அதைத்தொடா்ந்து அமைப்பினுடைய கலைஞா்கள் பாராட்டப்பட்டனா்.

இதில் எழுத்தாளா் கனராமபுத்திரன், கவிஞா் இளங்கோவன், சண்முகம்நந்தன், கனகராஜ், மருத்துவா் பால்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூா் கிளைச் செயலாளா் நித்தியானந்தம் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →