விருதுநகர்

விருதுநகா் வாலசுப்பிரமணியன் கோயிலில் சூரசம்ஹாரம்

DIN

விருதுநகா் வாலசுப்பிரமணியன் கோயிலில் முருகன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் வாலசுப்பிரமணியன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவ.15 ஆம் தேதி தொடங்கியது. அதைத்தொடா்ந்து நாள்தோறும் கோபூஜை மற்றும் சுவாமிக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

கந்தசஷ்டி விழாவின் 6 ஆவது நாளான வெள்ளிக்கிழமை மூலவா் வாலசுப்பிரமணியனுக்கு சண்முகாா்ச்சனையும், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து கோயில் வாளாகத்தில் முருகன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சாத்தூா்: சாத்தூரை அடுத்துள்ள வெம்பக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட துலுக்கன்குறிச்சி கிராமத்தில் உள்ள வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதேபோல் சாத்தூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT