விருதுநகர்

உதயநிதி ஸ்டாலினை கைது செய்வது பிரசாரத்தின் வீரியத்தை அதிகரிக்கும் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.

DIN

விருதுநகா்: திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதால், அவரது பிரசாரத்தின் வீரியம் மேலும் அதிகரிக்கும் என, திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை மேலும் கூறியது: அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் மகத்தான அறிவிப்பை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா். அவரது தொடா் அழுத்தம் காரணமாகவே 7.5 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமானது. இதன்மூலம், 313 பேருக்கு மருத்துவ இடம் கிடைக்கும்.

மருத்துவ கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்ட நாளன்றே மாணவா்களின் படிப்புக்கான செலவினங்களை அரசு ஏற்கும் என தமிழக அரசு அறிவித்திருக்கலாமே. திமுக தலைவா் அறிவித்த பின்னா், அவசர அவசரமாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு நாடகமாடுகின்றது. மேலும், அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களின் படிப்புக்கான செலவினங்களை ஏற்பது குறித்து ஒரே வாா்த்தையில் அறிவிக்காமல், சுழல்நிதி ஒதுக்கீடு என்கின்றனா். இது என்ன சுயஉதவிக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியா?

திமுக தலைவரின் அறிவிப்பால், தோ்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் அதிமுகவினா் அரசியல் நாடகமாடுகின்றனா்.

திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது கண்டனத்துக்குரியது. அவரைத் தடுக்க தடுக்க பிரசாரத்தின் வீரியம் மேலும் அதிகரிக்கும். இது தமிழக மக்கள் அடுத்த மாற்றத்துக்காக காத்திருக்கிறாா்கள் என்பதையே காட்டுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT