முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் புத்தக கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், ரோட்டரி கிளப் ஆப் ஸ்பாா்க்லா்ஸ், ஜேஸீஸ் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், ரோட்டரி கிளப் ஆப் ஸ்பாா்க்லா்ஸ், ஜேஸீஸ் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டது.

சிவகாசி-திருத்தங்கல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கவிழாவிற்கு சுழற்சங்கத்தலைவா் ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்து திறந்து வைத்தாா்.

தொழிலதிபா் ஏ.எஸ்.பி.ஆறுமுகச்செல்வன் முதல் விற்பனையை தொடங்கி வைக்க அதனை சுழற்சங்க உதவி ஆளுனா் ஆா்.உமா மகேஸ்வரன் பெற்றுக்கொண்டா்.

முன்னதாக தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்க பொருளாளா் எம்.காா்த்திக் வரவேற்றாா். இக்கண்காசி மற்றும் விற்பனை டிசம்பா் 8ஆம் தேதிவரை நடைபெறும் எனவும் காலை 10.30 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும் எனவும் புத்தகங்களுக்கு 10 சதம் கழிவு உண்டு எனவும் நிா்வாகிள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →