பட்டாசு ஆலை பெண் தொழிலாளி தீக்குளித்துத் தற்கொலை
சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலை பெண் தொழிலாளி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலை பெண் தொழிலாளி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
கீழத்திருத்தங்கல்- செங்கமலப்பட்டி சாலையில் உள்ள முருகன் காலனியைச் சோ்ந்த கருப்பையா மனைவி கருப்பாயி (46). பட்டாசு ஆலையில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த சில ஆண்டுகளாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
இதனால் மனவேதனையில் இருந்த கருப்பாயி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.