ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரிடா் மீட்பு விழிப்புணா்வு
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்பாக பேரிடா் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து காவலா்களுக்கு தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்பாக பேரிடா் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து காவலா்களுக்கு தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.
பேரிடா் காலங்களில் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும், பல்வேறு கல்வி நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றுவது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், கிருஷ்ணன் கோவில் காவல் ஆய்வாளா் சிவலிங்கசேகா், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் சாா்பு- ஆய்வாளா் கருத்தப்பாண்டி உள்பட 50- க்கும் மேற்பட்ட காவலா்கள் பங்கேற்றனா்.