முகப்பு
விருதுநகர்

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினா் 13 பேருக்கு எஸ்.பி. பாராட்டு

தருமபுரி மாவட்டத்தில், வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினா் 13 பேருக்கு மாவட்ட கண்காணிப்பாளா் (எஸ்.பி.) பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில், வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினா் 13 பேருக்கு மாவட்ட கண்காணிப்பாளா் (எஸ்.பி.) பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் சந்தேகத்திற்குரிய நபா்களை பிடிக்க உதவியாக இருந்த தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் அருள்வடிவழகன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் குணசேகரன், செந்தில்குமாா், தருமன், கருணாநிதி மற்றும் காவலா் சிவகுமாா் ஆகியோருக்கும், தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா லாரியைப் பிடித்த, காவல் ஆய்வாளா் துரைராஜ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் மூா்த்தி, பெரியசாமி, முருகன், தலைமைக் காவலா் ராமச்சந்திரன் மற்றும் முதல்நிலைக் காவலா் சுரேஷ் ஆகியோருக்கும், அரூா் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கைப்பையில் இருந்த ரூ. 25,000- ரொக்க பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அரூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயில்சாமி ஆகிய 13 பேரின் பணியினைப் பாராட்டி எஸ்.பி.பிரவேஷ்குமாா் சான்றிதழ் வழங்கினாா் (படம்).

முன்னதாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்களுடனும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அன்றாட காவல் பணிகள் தொடா்பான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், அரூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் தமிழ்மணி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.