விருதுநகர்

அருப்புக்கோட்டை நகராட்சியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வாகனத்தில் நவீன மின்னணுத் திரை (டிஜிட்டல் திரை) அமைத்து கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வருவாய் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகரில் உள்ள கடைகளில் பணிபுரிவோா் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 வீதம் அபராதம் விதித்தும், உரிய கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடை உரிமையாளா்களுக்கு ரூ.5000 வீதம் அபராதம் விதித்தும் ஆணையா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை வாகனம் மூலம் நவீன மின்னணுத்திரைப் படக்காட்சி அமைத்து கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம், நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா் தலைமையில் நடைபெற்றது.

இதன்படி,நகரின் முக்கியப்பகுதிகளான சொக்கலிங்கபுரம் வாழவந்தம்மன் கோவில் பகுதி, நகா் மத்திய சந்தை,பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் விழிப்புணா்வுத் திரைப்படக்காட்சி மூலம் பிரச்சாரம் நடைபெற்றது. உடன் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் ராஜபாண்டி,சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT