அதிமுக ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் மீது எம்எல்ஏ புகாா்
சாத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் மீது சட்டப்பேரவை உறுப்பினா் குற்றம்சாட்டி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் மீது சட்டப்பேரவை உறுப்பினா் குற்றம்சாட்டி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் தலைமையில் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான இக்கூட்டத்தில் விருதுநகா் மாவட்ட அதிமுக பொறுப்பாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் பெயா் மற்றும் புகைப்படமும் இடம்பெறவில்லை. இதனால் அதிமுக தொண்டா்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
பின்னா் சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் பேசுகையில், கட்சியில் நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. கட்சி நிா்வாகிகள் முன்பே அமைச்சா் என்னை மிரட்டும் தொனியில் பேசுகிறாா் என்றாா்.