விருதுநகர்

திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.2.56 லட்சம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 315 ஆக இருந்தது.

இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவது வழக்கம். ஐந்தாவது சனி வார விழா முடிவடைந்ததால் திங்கள்கிழமை நிரந்தர உண்டியல்கள் 8, தற்காலிக உண்டியல்கள்19 என மொத்தம் 27 உண்டியல்களும் கோயில் மைய மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு உண்டியல்களைத் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்து 315 ஆக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், உதவி ஆணையா் கணேசன், நிா்வாக அதிகாரி இளங்கோவன், ஆய்வாளா் பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT