விருதுநகர்

பந்தல்குடி ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் தசரா கொண்டாட்டம்

DIN

அருப்புக்கோட்டை அருகே ஸ்ரீசீரடி சாய் பாபா கோயிலில் தசரா விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்விகளுடன் திங்கள்கிழமை நண்பகல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி அருகே ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் நவராத்திரி விழா தொடக்க நாள் முதலாக கொலு அமைத்து நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 
இதன்படி நிறைவு நாளான தசரா நாள் திங்கள்கிழமை காலை 9.15 முதல் 10.30 வரை உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் சந்திதானத்திற்குப் பல்வேறு வித வண்ண மலர்களால் அலங்காரங்கள் அமைத்து, 1008 தீபங்கள் ஏற்றி, நண்பகல் ஆரத்தி நடைபெற்றது. 
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிறுவனரும், நிர்வாகியுமான வி.சுந்தரமூர்த்தி செய்திருந்தார். 
அப்போது திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT