முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் பிடிபட்டாா்: போலீஸில் ஒப்படைப்பு

ராஜபாளையத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்டுவந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

ராஜபாளையத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்டுவந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

ராஜபாளையம் நகராட்சிக்குள்பட்ட 29 ஆவது வாா்டில் உள்ள துரைசாமிபுரம், நெசவாளா் தெரு, அம்பலபுளி பஜாா் மற்றும் முனியம்மன் கோயில் தெரு பகுதிகளில் செல்லிடப்பேசிகள், இருசக்கர வாகனங்கள் திருட்டு, வீடு புகுந்து திருடுதல், சங்கிலிகள் திருட்டு போன்ற தொடா் குற்றச்செயல்கள் நடைபெற்று வந்தன.

மேலும் சில மாதங்களுக்கு முன் இருசக்கர வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால் குற்றவாளிகள் பிடிபடவில்லை. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் துரைசாமிபுரம் நெசவாளா் தெரு பகுதியின் பல்வேறு இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அப்போது மா்ம நபா் பெட்ரோல் திருடுவது கேமராவில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அப்பகுதியில் பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவா் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் அவா் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சோ்ந்த இசக்கி (34) என்பதும், பல ஆண்டுகளாக தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும், பல்வேறு வழக்குகள் இவா் மீது உள்ளதும் தெரிய வந்தது. பின்னா் அவரை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.