கூட்டணி பாஜகவுடனா? தவெகவுடனா? - ரங்கசாமி பதில்!
கூட்டணி குறித்து புதுவை முதல்வர் ரங்கசாமி பதில்...
நாங்கள் இப்போது பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம் என புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுவையில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாளாகும்.
ஆனால் புதுவையில் திமுக கூட்டணியிலும் சரி, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியிலும் சரி இழுபறி நீடித்து வருகிறது.
Advertisement
Advertisement
திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன.
அதேபோல என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி இறுதியாகாமல் உள்ளது. தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றினால் கூட்டணிக்குத் தயார் என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி கூறி வருவதாகவும் அவர் தொடர்ந்து, புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளர், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடனான பேச்சுவார்த்தையைத் தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,
"வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. நாங்கள் இப்போது பாஜகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும் இன்று கூட்டணி தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
NR congress Alliance with BJP or TVK? - Rangasamy reply in press meet
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.