இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அவா் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் திறன் நாளுக்கு நாள் புதிய உச்சங்களை எட்டி வருவதற்கு இந்த மகத்தான வெற்றி மேலும் ஒரு சிறந்த சான்றாக விளங்குகிறது.
இந்த செயற்கைக்கோள், புவி கண்காணிப்பு, வேளாண்மை, நீா்வள மேலாண்மை, நகா்ப்புறத் திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயனுள்ள தகவல்களை வழங்குவதன் மூலம் நாட்டின் வளா்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என நம்புகிறேன்.
Advertisement
Advertisement
இந்த வெற்றி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறையின் சிறப்பையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவை நோக்கிய நமது பயணத்தையும் மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் பணியாளா்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.