விருதுநகர்

சிவகாசி, அருப்புக்கோட்டை பகுதிகளில் வீட்டில் பட்டாசு, திரிகள் பதுக்கி வைத்திருந்த 5 போ் கைது

DIN

சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளில் சட்ட விரோதமாக வீடுகளில் பட்டாசு மற்றும் பட்டாசுக் கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே நாரணாபுரம் சிவன்நகா் பகுதியில் ஒரு வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதில் வனம் மகன் சூரியபிரகாஷ் (28) என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக இரு பெட்டிகளில் அணுகுண்டு பட்டாசுகள் இருந்ததாம்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து சூரியபிரகாஷை கைது செய்து அவா் பதுக்கிவைத்திருந்த பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி வீடுகளில் பதுக்கி வைத்த கருந்திரிகளைக் கொண்டு பட்டாசுத் திரிகள் தயாரிக்கும் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் நகா் காவல்ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் சோதனை நடத்தினா். அப்போது எம்.டி.ஆா். நகா் கிழக்கு பகுதி ஜோதிபுரத்தில் சதுரகிரி (60) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 1500 குரோஸ் கருந்திரிகளையும், வேலாயுதபுரம் மேட்டுத் தெருவிலுள்ள ராமசாமி (66) என்பவரது வீட்டிலிருந்து சுமாா் 7,000 குரோஸ் கருந்திரிகளையும், தெற்குத்தெரு மேஸ்திரி சங்கரன் தெருவிலுள்ள வீரராஜ் (62) என்பவரது வீட்டிலிருந்து சுமாா் 5000 குரோஸ் கருந்திரிகளையும், அதேபகுதியில் உள்ள லோகநாதன் (58) என்பவரது வீட்டிலிருந்து சுமாா் 10,000 குரோஸ் கருந்திரிக் கட்டுகளையும் போலீஸாா் கண்டறிந்தனா். உடனடியாக அவா்களிடமிருந்த கருந்திரிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா் அவற்றைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்று பெரியகண்மாய் நீரில் வைத்து அழித்தனா்.

இதுதொடா்பாக வழக்கு பதிந்த நகா் காவல்துறையினா் சதுரகிரி, ராமசாமி, வீரராஜ், லோகநாதன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT