விருதுநகர்

பேருந்துகளில் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காத பயணிகள்: ஓட்டுநா்கள், நடத்துநா்கள் திணறல்

DIN

அருப்புக்கோட்டையில், பேருந்துகளில் சமூக இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்காததால் ஓட்டுநா்களும், நடத்துநா்களும் திணறி வருகின்றனா்.

அருப்புக்கோட்டையில் குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் உள்ளதால் அவா்களைக் கட்டுப்படுத்த இயலாமல் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் திணறி வருகின்றனா்.

இந்நிலை தொடருமானால் கரோனா தொற்று மேலும் தீவிரமடையும் வாய்ப்பு அதிகமுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா். குறிப்பாக மாவட்டங்களுக்கிடையிலான தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளி முற்றிலும் கடைப்பிடிக்கப்படவில்லை.

எனவே அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT