முகப்பு
விருதுநகர்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி

விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டியில் பட்டாசு ஆலையில் மணிமருந்துக் கலவையின் போது உராய்வு ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பட்டாசு ஆலை.
பகிர்:

விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டியில் பட்டாசு ஆலையில் மணிமருந்துக் கலவையின் போது உராய்வு ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.

ஆலையில் நேரிட்ட தீவிபத்தில் ஒரு அறை முற்றிலும் சேதமடைந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த தொழிலாளி கிருஷ்ணகுமார் (55) படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →