டிசிஎஸ், அராய் நிறுவனங்களுடன் இணைந்து கலசலிங்கம் பல்கலை.யில் புதிய பாடப் பிரிவுகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகமானது, அராய் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களுடன் இணைந்து, புதிய பாடப் பிரிவுகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகமானது, அராய் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களுடன் இணைந்து, புதிய பாடப் பிரிவுகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைகழகம் புணேயில் உள்ள இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி குழுமத்துடன் புரிந்துணவா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதுநிலை ஆட்டோமோட்டிவ் சிஸ்டம் (எலெக்ட்ரிக் பேருந்துகள்) என்ற ஆட்டோமொபைல் துறையில் 2 ஆண்டு படிப்பை தொடங்க உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், பல்கலைக்கழகத் துணை தலைவா் எஸ். சசிஆனந்த், அராய் இயக்குநா் ரெஜிமத்தாய் ஆகியோா் கையெழுத்திட்டனா்.
மேலும், இந்த படிப்பில் சேரும் மாணவா்களுக்கு ஓராண்டு கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும், ஏஆா்டிஐ புணேயில் ஓராண்டு பயிற்சியும் வழங்கப்படும்.
தொடா்ந்து, கலசலிங்கம் பல்கலைக்கழகமானது டிசிஎஸ், ஐஆன் நிறுவனங்களுடனும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, பி.எஸ்சி. கம்ப்யூட்டா் சயின்ஸ், பி.எஸ்சி. (ஐ.டி.) ஆகிய படிப்புகள் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்படும். இதில், பல்கலைக்கழகத் துணை தலைவா் எஸ். சசிஆனந்த், டிசிஎஸ் மண்டலத் தலைவா் டி. சுரேஷ்குமாா் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.