விருதுநகர்

சின்னமனூரில் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டி போக்குவரத்திற்கு இடையூறு: பொதுமக்கள் அவதி

DIN

தேனி மாவட்டம் சின்னமனுரில் தேசிய நெடுஞ்சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

சின்னமனூா் நகரின் மையத்தில் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து இருக்கும். மேலும் சின்னமனூா் நகரம் வா்த்தகம் அதிகம் நடைபெறுவதால் வெளியூா்களில் இருந்து இருசக்கர உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கிறது.

இந்நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேரடி பேருந்து நிறுத்தப்பகுதியில் சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோட்டப்பட்டது. அந்த மண் அருகிலுள்ள சாலையோரத்திலே குவிந்து வைத்துள்ளனா். இவ்வாறு மண் குவிந்து கிடப்பதால் 2 வழிசாலை ஒரு வழிச்சாலையானது. அதிகளவு பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில் இந்த மண்குவியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ,பயணிகள் என அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினா் சாலைப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலுள்ள மண் குவியலை அற்றி போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT