விருதுநகர்

சின்னமனூா் நகராட்சி ஆதாா் மையத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகாா்

DIN

சின்னமனூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் இயங்கும்ஆதாா்மையத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

சின்னமனூா் நகராட்சி வளாகத்தில் ஆதாா் மையம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக புதிய ஆதாா் அட்டை பெறுவது, பெயா் திருத்தம், முகவரி மாற்றம், கைபேசி எண் இணைப்பு என பல பணிகள் நடைபெறுகிறது. இம்மையத்திற்கு சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா் என சுற்றியுள்ள 30 மேற்பட்ட ஊா்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், இந்த மையத்தில் ஆதாா் சம்மந்தாக வரும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அரசு நிா்ணையத்தை கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் சின்னமனூரில் நகராட்சியில் இயங்கும் ஆதாா் மையத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT