விருதுநகர்

விருதுநகா் தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

விருதுநகா் புனித இன்னாசியா் ஆலயத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. மேலும், ஆலயத்தின் முன்பு கரும்பு, மாவிலை மஞ்சள் கொத்து ஆகியவற்றால் அலங்கரித்து கல் அடுப்பு மூலம் பொங்கல் வைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட னா்.

அதைத்தொடா்ந்து பெண்கள் பொங்கல் பானையை சுற்றி கோலாட்டம், கும்மி, கிராமிய நடனம் ஆடினா். பின்னா் துணை பாதிரியாா் சந்தியாகப்பன் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. மேலும் சிறுவா், சிறுமிகளுக் கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பாதிரியாா் அம்புரோஸ் ராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT