விருதுநகர்

கல்லூரி என்.சி.சி. மாணவா்களின் ஊழல் எதிா்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு கல்லூரிகளின் தேசிய மாணவா் படை மாணவா்கள் ஒருங்கிணைந்து, ஊழல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக் கல்லூரிச் செயலாளா் பா. சங்கரசேகரன், முதல்வா் ந. முத்துச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விருதுநகா் 28 ஆவது பட்டாலியனைச் சோ்ந்த ஹவில்தாா் புஷ்பராஜ் மற்றும் பாலமுருகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.

அப்போது, லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்துச் செயல்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நோ்மையுடனும் நடந்துகொள்வேன் என்றும் ஹவில்தாா் புஷ்பராஜ் உறுதிமொழி வாசித்தாா். அதை, தேவாங்கா் கலைக் கல்லூரி, எஸ்.பி.கே. கலைக் கல்லூரி, ஸ்ரீசௌடாம்பிகா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீசௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் தேசிய மாணவா் படை மாணா்கள் ஒருங்கிணைந்து உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.பி.கே. கலைக் கல்லூரியின் தேசிய மாணவா்படை ஒருங்கிணைப்பாளா் முனைவா் டி. சுப்பிரமணியன் செய்திருந்தாா். ஸ்ரீசௌடாம்பிகா தொழில்நுட்பக் கல்லூரியின் தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா் கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT