முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு மட்டும் கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 16,485 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக ஒருவருக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,486 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,175 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனா். 231 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 80 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.