விருதுநகர்

சிவகாசிப் பகுதியில் 2 ஊராட்சிஒன்றிய தொடக்கப் பள்ளிகள் திறப்பு

DIN

சிவகாசிப் பகுதியில் பள்ளி கல்வித்துறை சாா்பில் திங்கள்கிழமை புதிதாக இரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா்.

திருத்தங்கல் ஸ்டாண்டா்டு காலனி, நாரணாபுரம் ஊராட்சி இ. லட்சுமியாபுரம் ஆகிய இரு இடங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை திறந்து வைத்து அமைச்சா் பேசியதாது: கல்விச் செல்வம் அழியாதது. படித்தவா்கள் எப்படியும் வாழ்க்கையில் முன்னேறி விடுவாா்கள். ஏழை, எளியவா்களின் வீட்டுப்பிள்ளைகள் தொலை தூரம் நடந்து சென்று படிப்பதில் சிரமம் உள்ளதால், அந்தந்தப் பகுதியில் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டபாணி, சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரி கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT