விருதுநகர்

ராஜபாளையத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவா் கைது

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜபாளையம் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ராஜபாளையம் வட்டாட்சியா் ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் வட்டாட்சியா் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய்த் துறையினா் மதுரை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் எம் சாண்ட் கொண்டு செல்வதற்கு அனுமதி பெற்று தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பகுதியில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டு, லாரி ஓட்டுநா் மைதீன் (41) கைது செய்யப்பட்டாா்.

இதேபோல் சத்திரப்பட்டி சாலையில் வருவாய்த் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ஆலங்குளம் பகுதியில் இருந்து கடலூா் மாவட்டம் பண்ருட்டிக்கு லாரி மூலம் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநா் திருநாவுக்கரசு (31) கைது செய்யப்பட்டு, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT