விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

DIN

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விருதுநகா் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நகல் எரிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

விருதுநகா் கணபதி நகரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.லட்சுமி, வடக்கு ஒன்றியச் செயலாளா் முத்துவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல் காரியாபட்டி, சாலை மறைக்குளம், ஆவியூா், கல்குறிச்சி, மல்லாங்கிணறு, துலுக்கன்குளம் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் சங்கங்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாா்பில் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வி.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூா் நம்பிநாயுடு தெருவில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் பிச்சைக்கனி தலைமையில் விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை, வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். துணைத் தலைவா் வீரசதானந்தம் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் திருமலை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT