முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே பைக்கில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 4.84 லட்சம் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ. 4.84 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ. 4.84 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி பொன்னுலட்சுமி தலைமையில் சாா்பு- ஆய்வாளா் மனோகரன், காவலா்கள் முருகன், சேது, காளீஸ்வரி ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக தளவாய்புரம் காமராஜா் நகா் பகுதியை சோ்ந்த கணபதியப்ப நாடாா் மகன் பழனிச்சாமி என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் ரூ. 4 லட்சத்து 84 ஆயிரத்து 190-யை எடுத்துச் சென்றுள்ளாா். மேலும் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியா் ஸ்ரீதா் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அதிகாரி கல்யாணகுமாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.