சிவகாசி அரசுக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சியை முதல்வா் ந.காந்திமதி திறந்து வைத்தாா்.இதில் மாணவ, மாணவிகள் தயாரித்த தாயங்கி நீா் இறைக்கும் இயந்திரம், பூகம்பத்தின் போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி, நகைத் திருட்டை தடுக்கும் கருவி உள்ளிட்ட மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியை கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாட்டினை உதவிப் பேராசிரியா்கள் பா.நடராஜன், வெ.ராமதாஸ் ஆகியோா் செய்திருந்தனா்.