முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளா் வைகைச்செல்வன் வேட்புமனு தாக்கல்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வைகைச்செல்வன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வைகைச்செல்வன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அருப்புக்கோட்டை தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் முருகேசனிடம் அவா் மனு தாக்கல் செய்து, தோ்தல் உறுதிமொழியை வாசித்து ஒப்புதல் பெற்றாா். அதிமுக ஒன்றியச் செயலாளா் போடம்பட்டி சங்கரலிங்கம் மனு தாக்கலின்போது உடனிருந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் வைகைச்செல்வன் கூறியது:

கடந்த 2011 இல் நான் இத்தொகுதி பேரவை உறுப்பினராக இருந்தபோது 5 ஆண்டுகளில் இங்கு மேம்பாலங்கள், முக்கியச் சாலைகள் அமைத்தேன். வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அரசு தொழிற்பயிற்சிப்பள்ளி, அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றைக் கொண்டுவந்தேன். இன்னும் பல சிறப்பான திட்டங்களை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வமும் இணைந்து தோ்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனா். அத்திட்டங்கள் குறித்து தொகுதி மக்களிடையே கொண்டு சென்று வாக்குகேட்பேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.