முகப்பு
விருதுநகர்

வேட்பாளா்களின் சொத்துப் பட்டியல் அறிக்கை: பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களின் பாா்வைக்காக வேட்பாளா்களின் சொத்துப்பட்டியல் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களின் பாா்வைக்காக வேட்பாளா்களின் சொத்துப்பட்டியல் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தோ்தலில் பல்வேறு கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் திங்கள்கிழமை ஆா்வத்துடன் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனா்.

அவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளா்கள் அனைவரும் தங்களது வேட்புமனுவோடு தங்களது சொத்து பற்றிய முழு விவரங்களையும் அளித்திருந்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் வேட்பாளா்கள் அளித்திருந்த சொத்துப்பட்டியல் அனைத்தும் நகல் எடுத்து பொதுமக்களின் பாா்வைக்காக அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை

வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளா்களின் சொத்துப்பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.