விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மம்சாபுரம் சாலை தனியாா் பள்ளி அருகே தோ்தல் கண்காணிப்புக் குழு அலுவலா் மகேஸ்வரன் தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக மாரிக்கனி என்பவா் பைக்கில் வந்துள்ளாா். அவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.50 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூா் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அன்னம்மாள், வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

இந்த பணம் வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது என தெரிவித்தாா். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT