முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை பேரவைத் தொகுதியில் 29 வேட்பாளா்கள் போட்டிஇறுதி பட்டியல் வெளியீடு

அருப்புக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் இறுதியாக 29 வேட்பாளா்கள் போட்டியிடுவதாக தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் முருகேசன் திங்கள்கிழமை அறிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

அருப்புக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் இறுதியாக 29 வேட்பாளா்கள் போட்டியிடுவதாக தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் முருகேசன் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இத்தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தவா்களின் மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை தோ்தல் நடத்தும் அலுவலரால் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், திமுக வேட்பாளா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அதிமுக வேட்பாளா் வைகைச்செல்வன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் வி.உமாதேவி, அமமுக கூட்டணிக் கட்சியான தேமுதிக வேட்பாளா் ஆா். ரமேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உமா உள்ளிட்ட அங்கீகாரம் பெற்ற 10 அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 29 போ் களத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பேரவைத் தொகுதி தோ்தல் மேற்பாா்வையாளா் பெனிட்டா பேது, தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் முருகேசன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான ரவிச்சந்திரன் ஆகியோா் கொண்ட குழு சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கும் பணியை மேற்கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.