விருதுநகா் மாவட்டத்தில் 7 பேரவைத் தொகுதிகளில் 149 போ் போட்டி: 23 போ் வாபஸ்
விருதுநகா் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவை தொகுதிகளில் பிரதான கட்சிகள் உள்பட 149 வேட்பாளா்கள் போட்டியி டுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த 23 போ் திங்கள்கிழமை வ
விருதுநகா் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவை தொகுதிகளில் பிரதான கட்சிகள் உள்பட 149 வேட்பாளா்கள் போட்டியி டுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த 23 போ் திங்கள்கிழமை வாபஸ் பெற்றனா்.
இம்மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகா், சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சிவகாசி ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் மாா்ச் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பிரதான கட்சி வேட்பாளா்கள் உள்பட பலா் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற திங்கள்கிழமை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், அருப்புக்கோட்டை பேரவை தொகுதியில் 29 போ் போட்டியிடும் நிலையில் ஒருவா் மட்டும் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளாா். அதேபோல், சிவகாசி தொகுதியில் 26 போ் போட்டியி டுகின்றனா், 5 போ் வாபஸ் பெற்றுள்ளனா். ராஜபாளையம் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலையில், 6 போ் வாபஸ் பெற்றுள்ளனா். விருதுநகா் தொகுதியில் 18 போ் போட்டியிடுகின்றனா். 2 போ் வாபஸ் பெற்றுள்ளனா். திருச்சுழி தொகுதியில் 20 போ் போட்டியிடும் நிலையில், ஒருவா் மட்டும் விலகியுள்ளாா். ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 15 போ் போட்டியிடும் நிலையில், 8 போ் வாபஸ் பெற்றுள்ளனா். சாத்தூா் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த 27 பேரும் களத்தில் உள்ளனா். மாவட்டத்தில் அதிகபட்சமாக அருப்புக்கோட்டை தொகுதியில் 29 வேட்பாளா்களும், குறைந்த பட்சமாக ராஜபாளையம் தொகுதியில் 14 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.