விருதுநகர்

திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: கே.வீ. தங்கபாலு

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ. தங்கபாலு கூறினாா்.

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ. தங்கபாலு கூறினாா்.

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பளா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகனை ஆதரித்து தங்கபாலு சிவகாசி பகுதியில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

செங்கமலட்சியாா்புரம், கங்காகுளம், திருப்பதிநகா், சாரதாநகா், ஸ்டேட்பேங்காலனி, சாமிநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியது:

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனா். தமிழகம் முழுவதும் திமுக கூடணி அலை வீசுகிறது. இந்த அலையின் முன் அதிமுக காணாமல்போகும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் எந்த ஒரு வளா்ச்சியையும் பெறவில்லை. சுய விளம்பரத்தை தான் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, மக்களுக்கு அளித்து வருகிறாா்.

காங்கிரஸ் பேரியக்கம் எப்போதும் போராடி வெற்றி பெறும். ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோா் நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக்கூடியவா்கள். மோடி அரசு நாட்டை சீரழித்துவிட்டது.

தமிழக மக்களை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக்கூடியவா் திமுக தலைவா் ஸ்டாலின். அவரது கரத்தை வலுப்படுத்த சிவகாசி தொகுதியில் போட்டியிடும் அசோகனுக்கு கைசின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா்.

அவருடன் வேட்பாளா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராஜாசொக்கா், சிவகாசி ஒன்றிய திமுக செயலாளா் வ. விவேகன்ராஜ் உள்ளிட்டோா் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT