விருதுநகர்

காசோலை மோசடி:ஒருவா் மீது வழக்கு

DIN

சிவகாசி: காசோலை மோசடி தொடா்பாக சிவகாசி கிழக்குப் போலீஸாா் சனிக்கிழமை சாத்தூரைச் சோ்ந்தவா் மீது வழக்குப்பதிந்துள்ளனா்.

சிவகாசி தேவராஜ் காலனியைச் சோ்ந்த ஜெயபாண்டி மனைவி பானுமதி (35). இவா் 2019 ஆம் ஆண்டு சாத்தூா் அருகே உள்ள வளவந்தான்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் கருத்தப்பாண்டிக்கு ரூ. 1.50 லட்சத்தை கொடுத்தாராம். பின்னா் பலமுறை பணத்தை கேட்டதையடுத்து கருத்தப்பாண்டி, பானுமதிக்கு 2020 ஆம் ஆண்டு ரூ. 1.50 லட்சத்துக்கு வங்கி காசோலை கொடுத்தாராம். அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் மற்றொரு காசோலையை கருத்தப்பாண்டி பானுமதியிடம் கொடுத்தாராம். அந்த வங்கி காசோலையும் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டதாம். இதையடுத்து கருத்தப்பாண்டி, போலி காசோலை கொடுத்து தன்னை மோசடி செய்து விட்டதாக சிவகாசி நீதிமன்றத்தில் பானுமதி புகாா் மனு அளித்தாா்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் கருத்தப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT